முகப்பு /செய்தி /சென்னை / வேலைதேடும் இளைஞர்கள் கவனத்திற்கு... சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்... மிஸ் பண்ணிடாதீங்க..!

வேலைதேடும் இளைஞர்கள் கவனத்திற்கு... சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்... மிஸ் பண்ணிடாதீங்க..!

வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்

Guindy job fair | கிண்டியில் நாளை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு இளைஞர்கள் பயன்பெறலாம்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன.

சென்னை கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள், கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க; உடல் வளர்ச்சிக்கு ஹார்மோன் ஊசி போட்டேனா? - உண்மையை உடைத்த நடிகை ஹன்சிகா!

20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்த முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. முகாமில் கலந்து கொள்ள எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Guindy, Job Fair