முகப்பு /செய்தி /சென்னை / தக்காளி, வெங்காயம் விலை அதிரடியாக சரிந்தது... எவ்வளவு தெரியுமா?

தக்காளி, வெங்காயம் விலை அதிரடியாக சரிந்தது... எவ்வளவு தெரியுமா?

தக்காளி, வெங்காயம் விலை

தக்காளி, வெங்காயம் விலை

வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து 6 ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் விலை குறைந்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் ஒரு கிலோ நாட்டு தக்காளி 8 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறி விற்பனை மந்தமாக உள்ளது. இந்நிலையில் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து 6 ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் விலை குறைந்துள்ளது.

இதேபோன்று ஆயிரம் டன் தக்காளி வந்துள்ளதால், நாட்டு தக்காளி ஒரு கிலோ 8ரூபாய் முதல் 10 ரூபாய் வரையிலும், நவீன் தக்காளி 16 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெங்காயத்தின் விலையும் குறைந்து பெரிய வெங்காயம் 10 ரூபாய் முதல் 16 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம் 30 முதல் 50 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.

Also Read : சென்னையில் 7வயது சிறுவன் உயிரிழப்பு - நீச்சல் குளம் மூடல்

அதேபோல் காய்கறிகள் விலைகள் பொறுத்தவரை, இஞ்சி,பூண்டு 1 கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரையும், எலுமிச்சை 1 கிலோ ரூ.90, ரூ.100 க்கும், பீன்ஸ் 1 கிலோ ரூ.80 க்கும், பச்சை பட்டாணி ரூ.90 அதிகபட்சமாக இன்று விற்பனை செய்யப்படுகிறது.

First published:

Tags: Chennai, Vegetable, Vegetable price