முகப்பு /செய்தி /சென்னை / 6 பேர் பலியான கோர விபத்து... முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்...!

6 பேர் பலியான கோர விபத்து... முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்...!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2  இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட உத்தரவு.

  • Last Updated :
  • Tamil Nadu, India

செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்த்ரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் மணமை கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று மதியம் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி சென்ற பேருந்தும் பாண்டிச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த ஆட்டோவும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஆட்டோவில் பயணம் செய்த சென்னை, ஆலந்தூர். வ.உ.சி. நகரைச் சேர்ந்த காமாட்சி (வயது 80). கோவிந்தன் (வயது 60)  அமுலு (வயது 50), சுகன்பா (வயது 28), குழந்தைகள் ஹரிபிரியா (வயது 8) மற்றும் கனிஷ்கா (வயது 6) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

top videos

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும், தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2  இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Accident