சென்னை திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் திருடிக் கொண்டு சென்றார். அப்போது அங்கு போக்குவரத்து காவலர் தமிழ்ச்செல்வன் என்பவர் சரக்கு வாகனத்தை நிறுத்தி ஓட்டுனரை சோதனை செய்தார். அதில் அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக வாகனத்தை ஓரம் நிறுத்துமாறு போலீசார் அவரிடம் கூறினர். ஆனால் மது போதையில் இருந்த அந்த இளைஞர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றுள்ளான். இதை பார்த்த போக்குவரத்து காவலர் தமிழ் செல்வன் சரக்கு வாகனத்தை விரட்டி சென்று பிடிக்க முற்பட்டார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பாஸ்கர் என்ற முதியவர் மீது மோதி விட்டு தப்பி செல்ல முயன்றார். ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் மது போதையில் இருந்த இளைஞரை பிடித்து வைத்து திருவொற்றியூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் படிக்க... தொழிலில் நஷ்டம், பணத்திற்கு ஆசை... விஷ சாராயத்திற்கு மெத்தனால் விற்று சிக்கிய பேக்டரி உரிமையாளர்...!
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இளைஞரை மீட்டு காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு அச்சம்பட்டியைச் சேர்ந்த அல்லி துரை என தெரியவந்து. இச்சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்: அசோக் குமார், திருவெற்றியூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News