முகப்பு /செய்தி /சென்னை / சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத் தொகை... அவகாசத்தை நீட்டித்த சென்னை மாநகராட்சி..!

சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத் தொகை... அவகாசத்தை நீட்டித்த சென்னை மாநகராட்சி..!

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி

சென்னையில் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியை செலுத்தி, 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறுவதற்கு வரும் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai [Madras], India

நிதியாண்டில் முதல் அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு, 5 சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. அதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 4 லட்சத்து 89 ஆயிரத்து 794 உரிமையாளர்கள் இந்த ஊக்கத்தொகையை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ள நிலையில், அரையாண்டின் முதல் 30 நாட்களுக்குள் வரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

top videos

    இதனால், சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தி, ஊக்கத்தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து வரியை முறையாக செலுத்தி சென்னையின் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்குமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    First published:

    Tags: Chennai, Chennai corporation, Property tax