முகப்பு /செய்தி /சென்னை / இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்கள் ஒரே இடத்தில்.. சென்னை தீவுத்திடலில் திருவிழா..!

இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்கள் ஒரே இடத்தில்.. சென்னை தீவுத்திடலில் திருவிழா..!

சென்னை தீவுத்திடல்

சென்னை தீவுத்திடல்

சென்னை தீவுத்திடலில் சர்வதேச கைத்தறி கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Chennai [Madras], India

திருவிழா என்றாலே மகிழ்ச்சிதான், அதுவும் ஒரே இடத்தில் இந்தியாவின் கலை, உணவு, கைத்தறி பொருட்கள் கிடைக்கும் என்றால் அது பெரும் இன்பம் தானே, ஆம் சென்னை திருவிழா 2023 சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் நடைபெறும் இந்த விழா கடந்த 28 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியாவின் 22 மாநிலங்கள், 10 நாடுகளில் இருந்து கைவினை, கைத்தறி பொருட்களும், விற்பனைக்கு உள்ளது. அதே போல உணவுத் திருவிழாவும் இத்துடன் இணைந்து உள்ளது. உணவுப் பிரியர்களை சென்னை விழா பக்கம் திரும்பி பார்க்க வைத்ததுள்ளது. கைவினை பொருட்கள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த திருவிழா பெரிதும் மக்களை கவர்ந்துள்ளது, மொத்தம் 311 அரங்குகளுடன் அமைக்கப்பட்டு விற்பனைகள் கலைகட்டி வருகின்றன.

இந்த திருவிழாவிற்கு நுழைவு கட்டணம் 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கண்ணுக்கு கவர்ச்சியாக பல்வேறு மாநிலங்களின் கலை  நிகழ்ச்சிகள் மக்களை வெகுவாகக் மகிழ்ச்சியில் ஆழ்ததியுள்ளது, அதிலும் ஆப்பிரிக்காவில் இருந்து குஜராத்திற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பாக குடி பெயர்ந்த மலைவாழ் மக்களின் நடனம் காண்போரை வியக்க வைத்துள்ளது.

மக்கள் மத்தியில் சென்னை திருவிழா பெரிய வரவேற்பு பெற்றாலும் இப்படி ஒரு நிகழ்சிக்கு கூட்டம் சற்று குறைவாகவே இருக்கிறது. வார இறுதி நாட்களில் கூட்டம் மிகுதியாக காணப்பட்டாலும் வார நாட்களில் கோடை வெயிலின் காரணமாக கூட்டம் சற்று குறைவாக இருக்கிறது. சென்னையில் குழந்தைகளுடன் சென்ற இடத்திற்கு மீண்டும் சென்று பொழுதை கழிக்காமல் புதிய அனுபவத்துடன் பல்வேறு மாநிலங்கள் கலாச்சாரங்களையும் உணவு வகைகளையும் பெற்றது தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் புதிய அனுபவத்தை கொடுத்ததாகவே பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழக மகளிரின் மேம்பாட்டு  சார்பில் சுய உதவிக் குழுக்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இயங்கும் கைவினைப் பொருட்கள்  கண்காட்சியும் இங்கு உள்ளது. பனை மரங்கள் முக்கியத்துவம் அதன் பயன்பாடு பிளாஸ்டிக் இல்லாமல் புதிய பொருட்களை மக்களிடம் அதிக அளவில் சேர்ப்பது, கிராமப்புற பெண்களுக்கு இது போன்ற திருவிழாக்கள் பொருளாதார ரீதியாக வளர்வதற்கு மிக பெரிய உதவியாக இருப்பதாக கூறுகிறார்கள்.

இதையும் படிக்க : மெட்ரோ ரயிலில் வேலை என்று பரவும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தல்

கோடை குளிர்ச்சியாக., இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களை ஒரே இடத்தில் குவித்துள்ளது சென்னை திருவிழா. இந்த விழா வரும் 24ம் தேதி வரை நடைபெறுவதால் சென்னைவாசிகளும்,  சென்னைக்கு சுற்றுலா வரும் நபர்களும் தவறாமல் இந்த இடத்தை விசிட் செய்ய வேண்டும்.

First published:

Tags: Chennai, Festival, Tamil News