முகப்பு /செய்தி /சென்னை / போலீஸ்காரரின் மகளுக்கு தவறான சிகிச்சை என புகார்... விசாரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு பரிந்துரை

போலீஸ்காரரின் மகளுக்கு தவறான சிகிச்சை என புகார்... விசாரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு பரிந்துரை

தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்திய காவலர்

தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்திய காவலர்

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், தனது மகள் பிரத்திக்‌ஷாவுக்கு 3 முறை தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

  • Last Updated :
  • Chennai, India

தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக, போலீஸ்காரர் சென்னை தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்திய நிலையில், புகார் குறித்து விசாரிக்க மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவரலாக பணியாற்றி வரும் கோதண்டபாணி என்பவர் தலைமைச் செயலகம் முன்பு கடந்த வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபடர். அப்போது, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், தனது மகள் பிரத்திக்‌ஷாவுக்கு 3 முறை தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்: முதியோரும், இணை நோயாளிகள் கவனமாக இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

இதையடுத்து, தலைமைக் காவலர் கோதண்டபாணியின் புகாரை பெற்றுக்கொண்ட ஓட்டேரி காவல்துறையினர், பிரித்திக்‌ஷாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு பரிந்துரைத்துள்ளனர்.

இதனால், மருத்துவக்குழு அமைக்கப்பட்டு, சிறுமியின் அனைத்து சிகிச்சைகளும் ஆய்வு செய்யப்படும் எனவும், மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவக்குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Chennai, Chennai egmore