முகப்பு /செய்தி /சென்னை / சென்னை மக்களே... சனிக்கிழமை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது...

சென்னை மக்களே... சனிக்கிழமை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது...

மின்தடை

மின்தடை

Chennai power cut | மின் தடை தொடர்பான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது

  • Last Updated :
  • Chennai, India

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இந்த இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக மின் வாரியம், துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை அனுப்பி, மின் மாற்றி,மின் விநியோகப் பெட்டி உதவியுடன் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்கிறது. மின் வாரிய சாதனங்களில் எப்போதும் மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் இருக்கும்.

அவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அதன்படி பராமரிப்பு பணி நடைபெறும் நாட்களில், குறிப்பிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்த விவரம் பத்திரிகைகள், குறுஞ்செய்திகள் மூலமாக நுகர்வோருக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும்.

அந்த வகையில் சென்னையில் நாளை 13.05.2023 ( சனிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், போரூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் : வொய்ட்ஸ் ரோடு முழுவதும்.

போரூர் : பூந்தமல்லி மணலி சரவணா நகர், பத்ரிமேடு, பத்மாவதி நகர், அம்மன் நகர், திருப்பதி நகர், ஸ்ரீராம் நகர், ராணியம்மாள் நகர், பஜனை கோவில் தெரு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.

First published:

Tags: Chennai, Chennai power cut, Power Shutdown