முகப்பு /செய்தி /சென்னை / நடுரோட்டில் பாஜக பிரமுகர் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்...!

நடுரோட்டில் பாஜக பிரமுகர் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்...!

காட்சி படம்

காட்சி படம்

பாஜக பிரமுகரை நடுரோட்டில் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை பூந்தமல்லி அருகே காரில் நாட்டு வெடிகுண்டு வீசி, பாஜக பிரமுகரை ஓட ஓட விரட்டி வெட்டிகொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பிபிஜி சங்கர். இவர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜகவின் எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநிலப் பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தனது வீட்டிற்கு நேற்றிரவு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் அவரது காரை, வழி மறித்த மர்ம நபர்கள் சிலர், காரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர்.

இதையும் படிங்க;  இன்றைய முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.

இதில் நிலை குலைந்த கார் சிறிது தூரத்தில் நின்றதும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பிபிஜி சங்கர் கீழிறங்கி ஓடியுள்ளார். அப்போது அங்குப் பதுங்கியிருந்த மற்றொரு கும்பல் பிபிஜி சங்கரை, சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் பிபிஜி சங்கர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

Also Read :கட்டாய மருத்துவ படிப்பு - மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்த சென்னை மாணவி

top videos

    இதையடுத்து தகவல் அறிந்து வந்த நசரத்பேட்டை காவல்துறையினர் உயிரிழந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பாஜக பிரமுகரை வெட்டிகொன்ற கும்பலைத் தேடி வருகின்றனர்.

    First published:

    Tags: Chennai, Crime News