மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் தாம்பரம், எழும்பூர், போரூர், அண்ணா நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் நாளை (9-ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (10-ம் தேதி ) மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் சேவை வழங்கும் துறை மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின்சார சேவையைத் துண்டிப்பது வழக்கமாகும். சென்னையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் நாட்களில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் 9-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், எழும்பூர், போரூர், அண்ணா நகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். அதன் விபரம் பின்வருமாறு:-
செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள்:-
தாம்பரம் : சிட்லபாக்கம் பாம்பன்சாமிகள் சாலை முழுவதும், பாரத் அவென்யூ, எஸ்.பி.ஐ.காலனி ஒரு பகுதி, சுதா அவென்யூ, வீரவாஞ்சி தெரு, ஆதிநாத் அவென்யூ, பாலாஜி நகர், வேளச்சேரி மெயின் ரோடு பகுதி ஐ.ஏ.எப் ஆஞ்சநேயர் கோயில் தெரு, காலமேகம் தெரு, மோகன் தெரு, வியாசர் தெரு, காந்தி நகர், கற்பகவிநாயகர் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
எழும்பூர் : கீழ்பாக்கம் கே.எம்.சி.மருத்துவமனை, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், கெல்லீஸ் சந்து, மில்லர்ஸ் ரோடு, செகரியேட் காலனி, பால்பர் ரோடு, ஆம்ஸ் ரோடு, புரசைவாக்கம் மெயின் ரோடு, மேடவாக்கம் தொட்டி சாலை, அயனாவரம், டைலர்ஸ் ரோடு, அகஸ்தியா நகர், புதிய ஆவடி ரோடு, மண்டபம் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
போரூர் : வயர் லெஸ் ஸ்டேசன் ரோடு, ஜெயா பாரதி நகர், குருசாமி நகர், ராமசாமி நகர் திருமுடிவாக்கம் திருநீர்மலை மெயின் ரோடு, சரண்யா நகர், ஷர்மா நகர், மங்களாபுரி நகர் 1வது மெயின் ரோடு, திருமுடிவாக்கம் சிட்கோ, வழுதலம்பேடு, கிருஷ்ணா நகர், பெருமாள் நகர், சம்பந்தம் நகர், தாய் சுந்தரம் நகர், மெட்ரோ கிராண்ட் சிட்டி ஐய்யப்பந்தாங்கல் மவுண்ட் பூந்தமல்லி ரோடு, சந்திரா நகர், ஜாஸ்மின் கோர்ட், டி.ஆர்.ஆர் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
அண்ணா நகர் : P பிளாக் முதல் Z பிளாக் வரை, ஐஸ்வர்யா காலனி, பி.எஸ்.என்.எல் குடியிருப்பு, ஆர்.பி.ஐ. குடியிருப்பு, ஜெயந்தி காலனி, போலீஸ் ஏசி குடியிருப்பு, 100 படுக்கை மருத்துவமனை, ராயல் என்க்ளேவ் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
புதன்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள்:-
அதேபோல சென்னையில் 10-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், போரூர், அம்பத்தூர், கிண்டி, கே.கே நகர், பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். அதன் விபரம் பின்வருமாறு:-
மயிலாப்பூர் : கோபாலபுரம் கான்ரான் ஸ்மித் ரோடு மற்றும் சந்து, லாயிட்ஸ் ரோடு, பத்மாவதியார் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
தாம்பரம்: மெப்ஸ் ஒய்யாலியம்மன் கோயில் தெரு, மல்லிமா வீதி, தெற்கு மற்றும் கிழக்கு மாட வீதி, தேரடி தெரு, குளக்கரை தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
போரூர்: மாங்காடு ரகுநாதபுரம், திருவள்ளுவர் சிட்டி I & II, சக்தி நகர், சமயபுரம் நகர், கணபதி நகர், கோவூர் பரணிபுத்தூர் ஊராட்சி ஒரு பகுதி, லீலாவதி நகர், கக்கிளிபேட்டை காவனூர் நடைபாதை, கண்ணப்பன் நகர், திருவள்ளுவர் தெரு, மோகலிங்கம் நகர், லாலாச்சத்திரம், இருங்காட்டுகோட்டை காற்றம்பாக்கம், பாலாஜி நகர், சாஸ்தா நகர், புதிய நல்லூர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
அம்பத்தூர் : முகப்பேறு குமரன் நகர், எம்.ஜி.மெயின் ரோடு, மகாலட்சுமி தெரு திருவேற்காடு மேத்தா மருத்துவமனை, பி.எச்.ரோடு, மதிரவேடு, கோ-ஆப்ரேட்டிவ் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
கிண்டி: வாணுவம்பேட்டை கேசரி நகர், திருவள்ளுவர் தெரு, சக்தி நகர், புவனேஸ்வரி நகர் ஆதாம்பாக்கம் டெலிபோன் காலனி, ஆப்பிசர் காலனி, எஸ்.பி.ஐ.காலனி, கணேஷ் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
கே.கே.நகர் : ஆழ்வார் திருநகர் காமாட்சி நகர் மெயின் ரோடு, காமகோட்டி நகர், கிருஷ்ணமாச்சாரி நகர், ஆற்காடு ரோடு பகுதி.
பெரம்பூர் : கீழ்பாக்கம் வாட்டர் வொர்க்ஸ் அயனாவரம் சுற்றியுள்ள இடம், தாகூர் நகர் சுற்றியுள்ள இடம், அண்ணா நகர் ஓ மற்றும் எல் பிளாக், ஐ.சி.எப்.பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai power cut, Local News