முகப்பு /செய்தி /சென்னை / சென்னை மக்களே அலெர்ட் .... நகரின் முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

சென்னை மக்களே அலெர்ட் .... நகரின் முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

மின் தடை

மின் தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னையில்  நாளை மற்றும் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

சென்னையில் 02.05.2023 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், போரூர், ஐடி காரிடர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மயிலாப்பூர்:  பெசன்ட் ரோடு, சண்முகம் ரோடு, தாண்டவராயன் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தாம்பரம்:  மெப்ஸ் மல்லிமா வீதி, தெற்கு மற்றும் கிழக்கு மாடத் தெரு, தங்கவேல் தெரு சிட்லபாக்கம் துரைசாமி நகர், சரஸ்வதி காலனி, ஆர்.ஆர். நகர், காமராஜர் காலனி, காந்தி தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர்: ஜெய் நகர், குன்றத்தூர் ரோடு பகுதி, ஆபிசர் காலனி திருமுடிவாக்கம் முருகன் கோயில் மெயின் ரோடு, நல்லீஸ்வரர் நகர், பாலவராயன் குளக்கரைத் தெரு, ஜெகநாதபுரம் ஐய்யப்பந்தாங்கல் மேட்டு தெரு, தனலட்சுமி நகர், பாலாஜி அவென்யூ, சுப்ரமணி நகர், பிரின்ஸ் அப்பார்ட்மெண்ட் ராமாபுரம் வெங்கடேஸ்வரர் நகர் 2 மற்றும் 3வது மெயின் ரோடு, தாங்கல் தெரு, மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

ஐடி காரிடர்:  சிறுச்சேரி நத்தம் ரோடு, எம்.கே.ஸ்டாலின் தெரு, நாவலூர் மெயின் ரோடு, கிரீன் உட் சிட்டி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

இதையும் படிங்க : வீட்டு சுவிட்ச் போர்டுகள் புதியது போல ஜொலிக்கணுமா? அழுக்குகளை இப்படி சுத்தம் செய்யுங்கள்.!

03.05.2023  (புதன்கிழமை) மின்தடை

சென்னையில் 03.05.2023 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக  போரூர், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

போரூர்: மங்களா நகர், அம்பாள் நகர், ஆர்.இ.நகர் பகுதி பூந்தமல்லி பூந்தமல்லி நகராட்சி முழுவதும், கரயான்சாவடி முழுவதும்,  கே.கே நகர், வசந்தபுரி, ஜீவா நகர், காமராஜ் நகர்  கோவூர் ஏரிக்கரை, திருமலை நகர், புத்த வேடு திருமுடிவாக்கம் 1, 5, 6 மற்றும் 14வது மெயின்ரோடு திருமுடிவாக்கம் சிட்கோ, ராயல் கேஸ்ட்டல் அப்பார்ட்மெண்ட், எ.ஆர்.ரகுமான் அவென்யூ மாங்காடு பட்டூர் பஜார் தெரு, பாத்திமா நகர், நியூ காமாட்சி நகர், லீலாவதி நகர் எஸ்.ஆர்.எம்.சி பரணிபுத்தூர் கிராமம் ஒரு பகுதி, தெள்ளியர் அகரம், தனலட்சுமி நகர், முத்தமிழ் நகர், ரம்யா நகர், கங்கையம்மன் கோயில் தெரு செம்மபரம்பாக்கம் நசரத்பேட்டை ஊராட்சி, அகரமேல், மலையம்பாக்கம் ஒரு பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்:  கிழக்கு முகப்பேர் கலெக்டர் நகர், கலைவாணர் காலனி, அமிர்தா பிளாட்ஸ், மெடிமிக்ஸ் அவென்யூ மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Local News, Power cut