மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் மயிலாப்பூர், தாம்பரம், போரூர், அம்பத்தூர், தண்டையார் பேட்டை, கே.கே.நகர், கிண்டி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் நாளை மறுநாள் (12-ம் தேதி ) மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் சேவை வழங்கும் துறை மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின்சார சேவையைத் துண்டிப்பது வழக்கமாகும். சென்னையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் நாட்களில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் 12.05.2023 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், போரூர், அம்பத்தூர், தண்டையார் பேட்டை, கே.கே.நகர், கிண்டி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மயிலாப்பூர் : கோபாலபுரம் எஸ்.பி.எஸ் I & II தெரு, பொன்னுசாமி தெரு, அம்மையப்பன் தெரு, முத்து தெரு மற்றும் சந்து, பீட்டர்ஸ் ரோடு, இந்திரா கார்டன் லஸ் சர்ச் ரோடு, கிழக்கு அபிராமபுரம் 1 முதல் 3வது தெரு, வாரன் ரோடு, விசாலாட்சி தோட்டம், கானல் பேங்க் ரோடு, தேசிகா ரோடு, வெங்கடேசா ஆசிரமம், ராயபேட்டை நெடுஞ்சாலை ஒரு பகுதி, கச்சேரி ரோடு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
தாம்பரம் : பல்லாவரம் மல்லிகா நகர், பி.வி.வைத்தியலிங்கம் ரோடு ஒரு பகுதி, திருமுருகன் நகர், வேல்ஸ் கல்லூரி மெயின் ரோடு, பங்காரு நகர் பம்மல் அண்ணா சாலை, மோசஸ் தெரு, நேரு தெரு, டீச்சர் சாமுவேல் தெரு, ராஜலட்சுதி தெரு, சங்கர் நகர் முழுவதும், திருநீர்மலை ரோடு, ஆதாம் நகர், எல்.ஐ.சி.காலனி மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க
போரூர் : பூந்தமல்லி டிரங்க் ரோடு, வைதீஸ்வரன் கோயில் தெரு, கங்கா சாரதி நகர் எஸ்.ஆர்.எம்.சி. ஐயப்பந்தாங்கல் மெயின் ரோடு, ஆர்.ஆர்.நகர் கோவூர் அம்பாள் நகர், மாட வீதி பகுதி முழுவதும், குமரன் நகர் முழுவதும், ஆறுமுகம் நகர், மேல்மா நகர் காவனூர் ஆர்.இ.நகர், சிறுகளத்தூர், மணிமங்கலம் சாலை, அழகேசன் நகர், நந்தவனம் நகர், ராஜீவ்காந்தி நகர் மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர் : கொரட்டூர் பாரதி நகர், முகப்பேறு ரோடு, காமராஜ் நகர், கஸ்தூரி நகர், அம்பத்தூர் முதல் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
தண்டையார்பேட்டை : டோல்கேட் வடக்கு டெர்மினேசன் ரோடு, டி.எச்.ரோடு பகுதி, அசோக் நகர், பாலகிருஷ்ணன் தெரு, தனபால் நகர், ஏ.ஈ,கோயில் தெரு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
கே.கே.நகர் : ஆழ்வார்திருநகர் திருவள்ளுவர் சாலை, பாலாஜி நகர், அண்ணா தெரு, காமராஜ் தெரு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
கிண்டி : வ.உ.சி தெரு, பிள்ளையார்கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு வாணுவம்பேட்டை சுரேந்திரா நகர், திருவள்ளுவர் நகர் டி.ஜி.நகர் ராம் நகர், இந்திரா நகர் ராஜ்பவன் வேளச்சேரி மெயின் ரோடு, சர்தார் பட்டேல் ரோடு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai power cut, Local News