முகப்பு /செய்தி /சென்னை / சென்னையை குளிர்வித்த கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி

சென்னையை குளிர்வித்த கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி

மாதிரி படம்

மாதிரி படம்

காலை 11 மணி அளவில், மீண்டும் சென்னையிலுள்ள அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், கொளத்தூர், பாடி, வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை பரவலாக மழை பெய்தது.

இந்நிலையில் காலை 11 மணி அளவில், மீண்டும் சென்னையிலுள்ள அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், கொளத்தூர், பாடி, வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால், சாலையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் வில்லிவாக்கம் சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில தினங்களாக கோடை வெப்பத்தில் இருந்த மக்களுக்கு திடீரென பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து மகிழ்ச்சியளித்தது.

First published:

Tags: Chennai, Rain updates, Rainfall