முகப்பு /செய்தி /சென்னை / சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம்...மாணவர்கள் விடிய விடியப் போராட்டம்

சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம்...மாணவர்கள் விடிய விடியப் போராட்டம்

மாணவர் போராட்டம்

மாணவர் போராட்டம்

மாணவனின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை ஐஐடி-யில் முனைவர் பட்டம் படித்துவந்த மாணவர் சச்சின்குமார் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடிய விடிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஐஐடி-யில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டு வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த சச்சின்குமார், வேளச்சேரியில் தான் தங்கியிருந்த வாடகை வீட்டில், சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். “என்னை மன்னித்துவிடுங்கள், இத்துடன் எனது வாழ்வை முடித்துக் கொள்கிறேன்" என தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவர் சச்சின்குமாரின் ஆய்வு வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் அகிஷ் குமார் அளித்த அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள மாணவர்கள், அதனைக் கல்லூரி நிர்வாகம் மறைக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

Also Read : ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை - பாஜக நிர்வாகி அலெக்ஸ்

இந்நிலையில், மாணவரின் மரணத்துக்கு நீதி கோரி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஐஐடி வளாகத்தில் இரவு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஐஐடி இயக்குநர் காமகோடி, இந்த விவகாரத்தில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என உறுதியளித்தார். எனவே, மாணவர்கள் கலைந்து செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

top videos
    First published:

    Tags: Chennai, Chennai IIT