முகப்பு /செய்தி /சென்னை / தமிழகத்தில் ஏன் இந்துக் கோவில்களை இடிக்கிறீர்கள் என வட இந்தியர் கேட்டார்- போலி தகவல்கள் குறித்து திருமாவளவன் வேதனை

தமிழகத்தில் ஏன் இந்துக் கோவில்களை இடிக்கிறீர்கள் என வட இந்தியர் கேட்டார்- போலி தகவல்கள் குறித்து திருமாவளவன் வேதனை

திருமாவளவன்

திருமாவளவன்

Thirumavalavan : வட இந்தியாவில் தமிழ்நாடு பற்றி திட்டமிட்டு தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதாக தொல்.திருமாவளவன் பேசினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி சென்னையில் சமத்துவ மராத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான இணையதள பதிவு, டி.சார்ட் வழங்குதல் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்  தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது பேசிய திருமாவளவன், “சாதி ஒழிப்பு பற்றி பேசுகிறோம். ஆனால் சாதி பின்னனி குறித்து ஆராய்ந்தால் தான் புரிந்துகொள்ள முடியும். புத்தர் சொன்ன கருத்துகள் கூட பிரிவினைவாதத்தை நோக்கி சென்றுவிட்டது. போலிகள், பொய்யான செய்திகள் உலவுகிறது. வதந்திகள் பரவுகிறது. இவற்றை களத்தில் நேரிடையாக இருந்ததால் புரிந்துகொள்ள முடியும். போராடி கொண்டு இருக்க வேண்டும். மக்களிடம் பணியாற்றி கொண்டே இருக்க வேண்டும்.

விமானத்தில் என்னுடன் பயணம் செய்த வட இந்தியர் ஒருவர் நீங்கள் தமிழ்நாடா என்று பேசத் தொடங்கினார். அப்போது தமிழ்நாட்டில் இந்து  கோவில்களை உடைக்கிறீர்களே என அவர் என்னிடம் கேட்டார். நாங்கள் ஏன் உடைக்கிறோம்? என்றேன். வட இந்தியாவில் சமூக வலைதளங்களில் தி.மு.க அரசு இந்துகளுக்கு எதிரானது. கோவில்கள் இடிக்கப்படுவதாக நிறைய பகிரப்பட்டு வருவதாக கூறினார். சமூக வலைதள தகவலை மட்டும் நம்ப வேண்டாம். தவறான தகவல் என கூறினேன்.

இதையும் படிங்க : விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ.. திருவள்ளுவர் சிலையையும் கண்டு ரசித்தார்..

என்னை அவருக்கு தெரியவில்லை. இதனால் நாம் எல்லா தளங்களில் வேலை செய்ய வேண்டும். அடுத்த தலைமுறையை நோக்கி செல்ல வேண்டும். புதிய இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என அம்பேத்கார் நினைத்தார். மோடி கூட புதிய இந்தியா என சொல்கிறார். பழைய இந்தியாவில் சமத்துவம் இல்லை. சனாதான இந்தியா. சகோதரத்துவம் இல்லை. சமத்துவத்திற்காக ஓடுவோம்.

தொப்பையை அதிகமாக வளர்ந்து இருக்கிறோம். நான் கூட 3 கிலோ மீட்டர் தூரம் ஓட முடியாது. ஓடிக்கொண்டு இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். உட்கார்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு பிரச்சனைகள் இருக்கும். அதிகாரத்தில் இருக்கிறேன். பதவியில்  இருக்கிறேன் என நாற்காலியிலேயே உட்கார்ந்து இருந்ததால் ஆயுள் சிக்கிரம் குறையும்” இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் : வினோத் கண்ணன் - இசிஆர் .

First published:

Tags: Chennai, Local News, Tamilnadu, Thol Thirumaavalavan