முகப்பு /செய்தி /சென்னை / கிரிப்டோ கரன்சியில் பணம் கட்ட வைத்து ரூ.100 கோடி மோசடி: சென்னையில் பாதிக்கப்பட்டோர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு...

கிரிப்டோ கரன்சியில் பணம் கட்ட வைத்து ரூ.100 கோடி மோசடி: சென்னையில் பாதிக்கப்பட்டோர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு...

மோசடி செய்த நபர்

மோசடி செய்த நபர்

Chennai Crypto Currency Fraud | சந்திரசேகர் இல்லத்தின் மின் இணைப்பை துண்டித்ததுடன், காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை அருகே கிரிப்டோ கரன்சியில் பணம் கட்ட வைத்து, 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்தவரின் இல்லத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் வானகரம் அருகேயுள்ள மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். கிரிப்டோ கரன்சியில் ஒரு லட்சம் முதலீடு செய்தால், மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை நம்பி, ஏராளமானோர் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்துள்ளனர். ஆனால், பணம் திரும்ப கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

இதையும் படிங்க: தமிழின் பெருமையைப் பிரதமர் அறிந்திருக்கிறார்... அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு..

top videos

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். எனினும், கடந்த ஜனவரி மாதம் ஜாமீனில் வந்துள்ளார். இந்நிலையில், முதலீடு செய்து பணத்தை இழந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சந்திரசேகர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சந்திரசேகர் இல்லத்தின் மின் இணைப்பை துண்டித்ததுடன், காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, சந்திரசேகரனை கைது செய்த மதுரவாயல் காவல்நிலையத்தினர், காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    First published:

    Tags: Chennai, Crypto currency