சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை உயர்மட்ட சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறு அறிக்கையை நெடுஞ்சாலை துறை ஆய்வு செய்து வருகிறது.
சென்னை மாநகரப் பகுதியில் கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை உயர்மட்ட சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கு அரசு 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்கட்டமாக கலங்கரை விளக்கம், அடையாறு, மத்திய கைலாஷ் வழியாக கிண்டிக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டன.
ஆனால், கலங்கரை விளக்கத்திலிருந்து செல்லும் சாந்தோம் நெடுஞ்சாலை குறுகலாக இருப்பதாலும், மத்திய கைலாஷ் பகுதியில் ஏற்கனவே ஒரு ’யு’ வடிவிலான பாலம் மற்றும் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் மாற்று பாதையில் தற்போது விரிவான திட்ட அறிக்கையை அரசு ஆராய்ந்து வருகிறது.
அதன்படி, கலங்கரை விளக்கத்திலிருந்து அடையாற்றின் வழியாக திரு.வி.க. பாலம், கோட்டூர்புரம் மேம்பாலம், சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம், காசி தியேட்டர் பாலம் வழியாக நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனை வரை உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடையாற்றில் இருந்து கிண்டி செல்ல நினைப்பவர்கள் திரு.வி.க. பாலத்திலும் கோட்டூர்புரம், மறைமலை அடிகளார் பாலம், காசி தியேட்டர் அருகே உள்ள பாலம் என நான்கு இடங்களில் இருந்து வாகன ஓட்டிகள் உயர்மட்ட சாலைக்குள் நுழையவும், வெளியேறும் வகையிலும் உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க... வாழைப்பழம், முட்டை மட்டுமே சாப்பிட்டால் உடல் எடை குறையுமா..? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்ன..?
ஆனால், இந்த வழித்தடத்தில் உள்ள கோட்டூர்புரம் பறக்கும் ரயில் பாலத்தையும், சைதாப்பேட்டையில் புறநகர் மின்சார ரயில் பாதையையும் உயர்மட்ட சாலை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் தொடர்பாக தற்போது ஆய்வு நடைபெற்று வரும் நிலையில், விரைவாக இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறைந்து எதிர்கால சென்னைக்கு நன்மை பயக்கும் வழியில் அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Road Safety