முகப்பு /செய்தி /சென்னை / சென்னை திரையரங்கில் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுப்பு...

சென்னை திரையரங்கில் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுப்பு...

ஏஜிஎஸ் திரையரங்கம்

ஏஜிஎஸ் திரையரங்கம்

Chennai | சென்னை மதுரவாயலில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் படம் பார்க்க வந்தவர்களிடம், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

போரூரை சேர்ந்த கோதண்டராமன் என்பவர், தனது நண்பர்களுடன் பிச்சைக்காரன்-2 திரைப்படத்தை காண மதுரவாயலில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கிற்கு சென்றுள்ளார். அங்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து 3 டிக்கெட்டுகள் கேட்டுள்ளனர். ஆனால், அதனை வாங்க மறுத்த திரையரங்க ஊழியர்கள், அருகே வைக்கப்பட்டிருந்த பதாகையை சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதில், ரிசர்வ் வங்கி விரைவில் 2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெற இருப்பதால், 2ஆயிரம் நோட்டுகள் இங்கு வாங்கப்படாது என்றும், வங்கிகளே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க சிறந்த இடம் என்றும் உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி என்றும் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.

அதனை பார்த்த அவர்கள் தங்களிடம் வேறு நோட்டுகள் இல்லை எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.தற்போது அனைத்து இடங்களிலும் வாங்குவதாக செய்திகள் வெளியாகுவதாகவும் ஏன் திரையரங்கில் வாங்க மறுப்பதாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க... லீ குவான் யூ-வுக்கு சிலை... சிங்கப்பூருக்கும் மன்னார்குடிக்கும் இப்படி ஒரு தொடர்பா? ஆச்சரிய தகவல்கள்..!

பின்னர் இது குறித்து காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் மதுரவாயல் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

top videos

    செய்தியாளர்: சோமசுந்தரம், பூந்தமல்லி

    First published:

    Tags: Chennai, Maduravoyal Constituency, Money, Theatre