முகப்பு /செய்தி /சென்னை / ரூ.535 கோடி பணத்துடன் சென்ற லாரி பழுதாகி நடுரோட்டில் நின்றது... தாம்பரத்தில் பரபரப்பு..!

ரூ.535 கோடி பணத்துடன் சென்ற லாரி பழுதாகி நடுரோட்டில் நின்றது... தாம்பரத்தில் பரபரப்பு..!

பழுதான ரிசர்வ் வங்கியின் லாரி

பழுதான ரிசர்வ் வங்கியின் லாரி

Chennai | சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து 2 கன்டெய்னர் லாரிகளில், விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு ரூ.535 கோடி பணம் கொண்டு செல்லப்பட்டது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து 535 கோடி ரூபாய் பணத்துடன் விழுப்புரம் வங்கிகளுக்கு சென்று கொண்டிருந்த 2 வாகனங்களில் ஒன்று, பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வங்கிகளுக்கு, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில், 535 கோடி ரூபாய் பணத்துடன், விழுப்புரம் நோக்கி 2 கண்டெய்னர் லாரிகள் சென்றன.

' isDesktop="true" id="981928" youtubeid="3NW27NNZx_c" category="chennai">

தாம்பரம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஒரு வாகனம் திடீரென பழுதாகி நின்றது. இது குறித்து காவல்துறையினருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்த லாரியை இழுவை வாகனம் மூலம் அருகில் உள்ள சித்தா மருத்துவமனை வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் படிக்க... ரூ.1000 முதல் முதலீடு.. வட்டியோ அதிகம்.. 2 மடங்கு லாபம் தரும் சூப்பரான சேமிப்பு திட்டம்!

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடியும் பழுது சரி செய்யப்படவில்லை. பின்னர் மற்றொரு வாகன உதவியுடன் கட்டி சென்னை ரிசர்வ் வங்கிக்கு இழுத்துச் சென்றனர்.

First published:

Tags: Chennai, Reserve Bank of India, Viluppuram S22p13