தாம்பரம் ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து தாம்பரம் மார்க்கெட் பகுதியை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. எப்போது மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் இந்த சுரங்கப்பாதையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தாம்பரம் பகுதியில் வழக்கறிஞராக பணியாற்றும் திலீபன் என்பவரது மனைவி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை டி-ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்தபடி பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் ஹிந்தியில் தகாத வார்த்தைகளால் பேசி அந்த பெண்ணை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஆடையை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்ததாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பயத்தில் அலறியுள்ளார். இதைப் பார்த்த சுரங்கப்பாதை பாதசாரிகள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்டோர் அந்த நபரை பிடிக்க முயன்றனர். கடும் போதையில் இருந்த அந்த நபர் தன்னை யாராவது நெருங்கி வந்தால் நடப்பதே வேறு என்றும் தான் ரயில்வே போலீஸ் அதிகாரி என்றும் அதிகாரத் தோரணையில் மிரட்டத் தொடங்கினார்.
மேலும் தனது செல்போன் மூலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே துப்பாக்கி ஏந்திய ஆர்பிஎப் போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த நபரை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயன்றனர். அதற்குள்ளாக தகவல் அறிந்து வந்த பெண்ணின் கணவர் வழக்கறிஞர் திலீபன், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிக்க : அமெரிக்க பெண்ணுக்கு மசாஜ் செய்யும் போது பாலியல் சீண்டல்.. இளைஞர் கைது!
அப்போது போதையில் இருந்த அந்த நபர் தீலீபனின் கையை முறுக்கி அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆர்பிஎப் போலீசுக்கு எதிராக கோஷமிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். மேலும் தாம்பரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ரயில்வே காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த அந்த போலிசார் திடீரென காவல் நிலையத்தில் இருந்து வெளியே ஓடிச் சென்று சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக எமர்ஜென்சி பிரேக்கைப் பிடித்து ரயிலை நிறுத்தியதால் அவர் உயிர் தப்பினார். பின்னர் அவரை ரயில்வே காவல் நிலைய போலீசார் மீட்டு தாம்பரம் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் ராஜையா நடத்திய விசாரணையில் உண்மை தெரியவந்ததையடுத்து, உதவி ஆய்வாளர் சீனிவாச நாயக்கை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்திரவிட்டார். ரயில்வே சுரங்கப்பாதையில் நடந்து சென்ற பெண்ணிடம் ரயில்வே பாதுகாப்புப்படை உதவி ஆய்வாளர் குடிபோதையில் அத்துமீற முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Harassed mentally, Railway police