முகப்பு /செய்தி /சென்னை / ராகுல் தகுதிநீக்கம்... கமலாலயத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர்..!

ராகுல் தகுதிநீக்கம்... கமலாலயத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர்..!

காங்கிரஸ் போராட்டம்

காங்கிரஸ் போராட்டம்

சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது.

  • Last Updated :
  • Chennai, India

மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டங்களை நடத்தி வருகிறது.

அந்த வகையில் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அங்கு போடப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

காங்கிரஸ் கட்சியினர் வந்திருப்பதை அறிந்த பாஜக தொண்டர்கள் அங்கு கூடியதால் அசாதாரண சூழல் நிலவியது. இதனையறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சுற்றி வளைத்து கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதனால் கமலாலயம் அமைந்துள்ள தியாகராய நகர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

First published:

Tags: BJP, Congress, Rahul Gandhi