முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் விபச்சாரம்... 4 மாதங்களில் 94 பெண்கள் மீட்பு... 55 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

சென்னையில் விபச்சாரம்... 4 மாதங்களில் 94 பெண்கள் மீட்பு... 55 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Chennai Prostitution | கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 34 விபச்சார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் விபசார தடுப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இது தொடர்பாக  சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 34 விபச்சார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விபசாரத்தில் தள்ளப்பட்ட 94 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகங்களில் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

இதையடுத்து, விபசாரத்தில் பெண்களை தள்ளி கொடுமைப்படுத்திய 55 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளனர்.

இதையும் படிங்க; தோனி மீது பதிவான 10 புகார்கள்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்... காரணம் இதுதான்...!

விபசார குற்றங்களுக்கு வழிவகை செய்யும் லோகன்டோ என்ற செயலி மற்றும் ஜஸ்ட் டயல், விவா ஸ்ட்ரீட் ஆப் போன்ற இணையதளங்களை முடக்கவும் சைபர் க்ரைம் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Chennai, Crime News, Cyber crime, Prostitution