முகப்பு /செய்தி /சென்னை / ஆட்டோவில் பயணிக்க ஒருநாள் முழுவதும் இலவசம்... சிஎஸ்கே வெற்றியை கொண்டாடும் தீவிர தோனி ரசிகர்!

ஆட்டோவில் பயணிக்க ஒருநாள் முழுவதும் இலவசம்... சிஎஸ்கே வெற்றியை கொண்டாடும் தீவிர தோனி ரசிகர்!

CSK வெற்றியை கொண்டாடும் ஆட்டோ டிரைவர்

CSK வெற்றியை கொண்டாடும் ஆட்டோ டிரைவர்

CSK Fan : சிஎஸ்கே வெற்றிபெற்றதால் இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டும் பூந்தமல்லியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை பூந்தமல்லியை சேர்ந்த ஸ்பீட் முருகேசன் என்ற ஆட்டோ ஓட்டுநர் ஐபிஎல் மேட்சில் சென்னை வெற்றி பெற்றதற்காக இன்று ஒரு நாள் முழுவதும் இலவசமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். ஐபிஎல் மேட்சில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் ஒரு நாள் முழுவதும் ஆட்டோ பயணம் இலவச மென 4 நாட்களுக்கு முன்பாகவே ஆட்டோவில் இவர் விளம்பரப் பலகை வைத்து வலம் வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதால் இன்று முழுவதும் இலவசமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இன்று காலையிலிருந்து 10க்கும் மேற்பட்ட நபர்களை சவாரிக்காக ஏற்றியுள்ளார். பூந்தமல்லியில் இருந்து அண்ணா சதுக்கம் வரை நீண்ட பயணத்தை கூட இலவசமாக முடித்துள்ளார்.

இவரது ஆட்டோவை பற்றி கேள்வியுற்ற இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கடந்த வாரம் இவரது ஆட்டோவில் சில கிலோமீட்டர் வலம் வந்ததாக ஸ்பீடு முருகேசன் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு வாழ்த்து சொன்ன சுந்தர் பிச்சை!

இன்றைக்கு வருமானம் இல்லை என்றாலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் மகிழ்ச்சி வருமானத்தை விட மிகப் பெரியது என ஸ்பீடு முருகேசன் மகிழ்ச்சி பொங்க கூறினார்.

First published:

Tags: Chennai, IPL 2023, Local News