ஆவடி காவல் ஆணையரகம் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்தவர் வள்ளிநாயகம் (வயது 32) .தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சுபாஷ் நகரில் வசித்து வருகிறார்.
2013 ஆம் ஆண்டு முதல் நிலை காவலராக காவல் துறையில் பணியாற்றிய இவர், 2022 முதல் திருமுல்லைவாயில் காவல் நிலைய ரோந்து காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 4 தேதி இரவு பணியின் பொழுது காவல் வாகனத்தில் சென்றபோது டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, வாகனத்தை வேகமாக இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக கூறி வள்ளிநாயகம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான காவலர் வள்ளிநாயகம் வீட்டில் இன்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுல்லைவாயில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் முபாரக் உள்ளிட்ட காவலர்கள் வள்ளி நாயகத்தின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக மீட்டு அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், வள்ளி நாயகத்தின் மனைவி திலகவதி தன் கணவர் இறப்புக்கு காரணம் ஆவடி காவல் ஆணையரகம் தலைமையக துணை ஆணையர் தான் என திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: கன்னியப்பன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.