முகப்பு /செய்தி /சென்னை / காரை படுக்கையாக்கி பாலியல் தொழில்.. நடுரோட்டில் காத்திருக்கும் ஆன்லைன் கஸ்டமர்ஸ்.. சிக்கிய நபர்!

காரை படுக்கையாக்கி பாலியல் தொழில்.. நடுரோட்டில் காத்திருக்கும் ஆன்லைன் கஸ்டமர்ஸ்.. சிக்கிய நபர்!

மாதிரி படம்

மாதிரி படம்

வெளி மாநில பெண்களுக்கு பணம், பொருள் தருவதாக ஆசை காட்டி,  கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தி வந்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras] |

பாலியால் தொழிலுக்காக வடமாநில மாடலிங் பெண்ணை காரில் அழைத்து வந்த பிரபல பாலியல் தரகர்  கைது செய்யப்பட்டார்.

சென்னையில் பாலியல் தொழில்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் ரகசிய தகவலின் படி விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மடிப்பாக்கம் சாஸ்திரி நகர், பஜார் மெயின் ரோடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சாலையோரம் வெகு நேரமாக கார் ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. அந்த காரில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும், காருக்கு அருகே ஆண் ஒருவரும் நின்றுக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில்,  வெளிமாநிலத்தில் இருந்து பெண்கள் வரவழைக்கப்பட்டு பாலியல் தொழிலுக்கு  பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், தனது  சொகுசு காரை படுக்கை அறையாக மாற்றம் செய்து பாலியல் தொழில் நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதையும் படிங்க; 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 40 வயது பெண் போக்சோவில் கைது.. நாகையில் அதிர்ச்சி..!

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் கர்நாடகா மாநிலம் பெங்களூரு சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த பிரபல பாலியல் புரோக்கர் சால்மன்(42) என தெரியவந்தது. இவர், வெளி மாநில பெண்களுக்கு பணம் பொருள் தருவதாக ஆசை காட்டி,  கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இவர் மீது சென்னையில் பல்வேறு பாலியல்  வழக்குகளும் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

அதைதொடர்ந்து, விபச்சார தடுப்பு பிரிவு போலீசார்  அவரை அதிரடியாக கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும்,  பாலியல்  தொழிலுக்கு அழைத்து வரப்பட்ட மாடலிங் பெண்ணை அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர் . மேலும், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய ஒரு சொகுசு கார், 10 செல்போன்கள், 2 ஸ்வைபிங் மெஷின், 37 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

First published:

Tags: Chennai, Prostitution