தமிழின் பெருமையைப் பிரதமர் அறிந்திருக்கிறார். அதனால் தான் தமிழின் பெருமையைப் பற்றித் தொடர்ந்து பேசி வருகிறார் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், தாய்மொழியில் படிக்காததால் புதிய கண்டுபிடிப்புகள் நின்றுவிட்டன என்று கூறியுள்ளார். தாய்மொழியில் படிக்கும் நாடுகளில்தான் வளர்ச்சி இருக்கும் எனவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் எல்லா பாடங்களையும் தமிழில் மொழி பெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், உலகத்தின் முதல் மொழி, தமிழ் மொழி தான். தமிழ் மொழியில் பெருமைகளைப் பிரதமர் மோடி உணர்ந்திருப்பதன் காரணமாக, தமிழின் பெருமையைப் பற்றித் தொடர்ந்து பேசி வருகிறார் என்று கூறியுள்ளார். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Also Read : பஸ், ரயில், மெட்ரோவுக்கு ஒரே கார்டு.. சிங்காரச் சென்னை அட்டைக்கு பதிவு செய்வது எப்படி?
இதனைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், தமிழும் தொழில்நுட்பமும் என்ற இரு பாடங்களை பொறியியல் மாணவர்களுக்கு அறிமுகம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழரின் பெருமையை மாணவர்கள் அறிய, தமிழ் ஆசிரியர்கள் நடத்தினால் சிறப்பாக இருக்கும் எனக் கருதி 29 தமிழ் ஆசிரியர்களை நியமித்துள்ளதாகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anna University, PM Modi