முகப்பு /செய்தி /சென்னை / பேருந்துகள் வராததால் ஆத்திரம்... கோயம்பேட்டில் நள்ளிரவில் போராட்டத்தில் குதித்த பயணிகள்...!

பேருந்துகள் வராததால் ஆத்திரம்... கோயம்பேட்டில் நள்ளிரவில் போராட்டத்தில் குதித்த பயணிகள்...!

கோயம்பேடு - பயணிகள் போராட்டம்

கோயம்பேடு - பயணிகள் போராட்டம்

Koyambedu | தென்மாவட்டங்களுக்குச் செல்வதற்கும் பேருந்து இல்லாததால், ஆத்திரமடைந்த பயணிகள், பிற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளை தடுத்து நிறுத்தினர்.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லை என்று கூறி, நள்ளிரவில் பயணிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்காக இரவு 10 மணி முதல் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும் பேருந்தில் ஏற முடியவில்லை எனவும், போதிய பேருந்துகள் இல்லை எனவும் பயணிகள் குற்றம்சாட்டினர். பேருந்து குறித்த விவரங்களை பயணிகளுக்கு கூற நேர காப்பாளர் உள்ளிட்ட யாரும் இல்லாததால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.

பின்னர் நீண்ட நேரம் கழித்து வந்த நேர காப்பாளரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பயணி ஒருவர் நேர காப்பாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவர், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை அழைத்து வந்து பயணிகள் சிலர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

மேலும் படிக்க... Tamil Live Breaking News | தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : உதயச்சந்திரன் ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு

இதனிடையே, தென்மாவட்டங்களுக்குச் செல்வதற்கும் பேருந்து இல்லாததால், ஆத்திரமடைந்த பயணிகள், பிற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

top videos

    பல நேரங்களில் முன்பதிவு செய்யாதவர்களுக்கு பேருந்தில் இடம் கிடைப்பதில்லை என பயணிகள் தெரிவித்தனர். பேருந்து பற்றாக்குறையால், வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள், நின்று கொண்டே பயணிக்கும் நிலை ஏற்பட்டது.

    First published:

    Tags: Bus, Chennai, Koyambedu