முகப்பு /செய்தி /சென்னை / “தினமும் 2 இட்லி, ஒரு டம்ளர் பால் மட்டுமே..” 108 வயதிலும் ஆரோக்கியமாக வாழும் சென்னை மூதாட்டி..!

“தினமும் 2 இட்லி, ஒரு டம்ளர் பால் மட்டுமே..” 108 வயதிலும் ஆரோக்கியமாக வாழும் சென்னை மூதாட்டி..!

108வது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி

108வது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி

சென்னையில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் 108வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தற்போதை காலத்தில் திடீர் மாரடைப்பு, சிறு வயதிலேயே சர்க்கரை நோய் போன்றவை சாதாரணமாகிவிட்டன. இந்த சூழ்நிலைகளுக்கு  மத்தியிலும் மூதாட்டி  ஒருவர் 108 வயதில் வெறும் 2 இட்லி மட்டும் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்பது நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் சோழபுரம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி தெய்வானை தனது 108வது பிறந்தநாளை பட்டுச்சேலை கட்டி மகிழ்ச்சியுடன் கேக் வெட்டினார். அவரிடம் அக்கம் பக்கத்தினர், வியாபாரிகள் ஆசீ பெற்றனர்.

78 வயதாகும் அவரது மகள் சின்ன பொண்ணு தனது தாயார்  குறித்து கூறுகையில், “நான் என் தந்தையைப் பார்த்தது இல்லை, தாயார் மட்டும் தான் சிறிய வயதில் இருந்து கட்டிட வேலை, வீட்டு வேலை செய்து என்னையும், 2 தம்பிகளையும் வளர்த்து வந்தார்” என்று தெரிவித்தார்.  தனது 2 தம்பிகளும் இறந்துவிட்டதாகவும், இப்போது தாயார் தன்னுடன் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Also Read : சென்னையில் நள்ளிரவை குளிர்வித்த மழை.. இதமான காலைப் பொழுது..!

மூதாட்டி உணவாகக் காலையில் வெறும் 2 இட்லிகள் மட்டும் சாப்பிடுவதாகவும், இரவில் 1 டம்ளர் பால் மட்டும் குடிப்பதாகவும் அவர்  தெரிவித்துள்ளார். இதுபோக, காலையில் கைதாங்கலாக  சிறிது தூரம் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதுவே அவரின் ஆரோக்கியத்திற்கும் காரணம் என்று அவரின் மகள் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கும் இரண்டும் முறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது சீரான உடல்நிலையில் 108 வயதில் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Chennai, Healthy Life, Woman