முகப்பு /செய்தி /சென்னை / நீச்சல் குளங்களில் புதிய கட்டுப்பாடு... சிறுவன் உயிரிழந்த நிலையில் சென்னை மாநகராட்சி உத்தரவு..!

நீச்சல் குளங்களில் புதிய கட்டுப்பாடு... சிறுவன் உயிரிழந்த நிலையில் சென்னை மாநகராட்சி உத்தரவு..!

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி

நீச்சல் குளங்களில் குளிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை பெரியமேட்டில் உள்ள My Lady park நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், நீச்சல் குளங்களில் சிறுவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

1. அதன்படி, சென்னை மாநகராட்சி நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி கிடையாது.

2. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை, நீச்சல் தெரிந்த பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் துணையில்லாமல் அனுமதிக்கக் கூடாது

3. 3.5 அடி ஆழத்திற்கு மேல் உள்ள நீச்சல் குளங்களில், 4 அடி உயரம் குறைவாக உள்ள சிறுவர்களை அனுமதிக்கக்கூடாது

4. நீச்சல் குளங்களில் டைவ் அடிப்பது போன்ற சாகசங்கள் செய்ய அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை முறையாகக் கண்காணிக்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு... அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ வெளியீடு...!

top videos

    மேலும், மை லேடீஸ் பூங்கா நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, நிர்வாக ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Chennai, Chennai corporation