முகப்பு /செய்தி /சென்னை / ஒரு மாத ரகசிய விசாரணை.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு கொள்ளையில் மேலும் ஒருவர் அதிரடி கைது!

ஒரு மாத ரகசிய விசாரணை.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு கொள்ளையில் மேலும் ஒருவர் அதிரடி கைது!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Aishwarya Rajinikanth theft | புகாரில் குறிப்பிட்டுள்ளதை விட கூடுதல் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதால், ஐஸ்வர்யாவின் வீட்டுக்குச் சென்றோ அவரை வரவழைத்தோ விசாரணை நடத்த போலீசார் முடிவு.

  • Last Updated :
  • Chennai [Madras], India

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் போயஸ்கார்டன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 9-ந் தேதி ஐஸ்வர்யா தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை திறந்து பார்த்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லாக்கர் பெட்டியில் இருந்த சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகளை காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்தார். உடனே ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு மாதமாக ரகசியமாக விசாரித்து வந்தனர். இந்த திருட்டு வழக்கு தொடர்பான தகவல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அதிரடியாக ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்த வேலைக்கார பெண் ஈஸ்வரியும், கார் டிரைவர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மயிலாப்பூரைச் சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பவர் திருடப்பட்ட நகைகளை வாங்கியதாக தேனாம்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.  மேலும், வினால்க் சங்கர் நவாலியிடம் 340 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த கொள்ளை வழக்கு தொடர்ந்து வருவதால், திருடப்பட்ட நகைகளின், வாங்கிய ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் குறித்தும் ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்து உள்ளனர். புகாரில் குறிப்பிட்டுள்ளதை விட கூடுதல் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதால் ஐஸ்வர்யாவின் வீட்டுக்குச் சென்றோ, அவரை வரவழைத்தோ விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

வீட்டுக்கு செல்லும்போது லாக்கரில் உள்ள நகைகள் பற்றி கேட்கவும் திட்டமிட்டுள்ளனர். போலீசில் புகார் அளித்தபோது சௌந்தர்யா திருமணத்தின் போது எடுத்த ஆல்பத்தையும் ஐஸ்வர்யா வழங்கியிருந்தார். அந்த ஆதாரத்துடன் ஒப்பிட்டு பார்த்து திருடப்பட்ட நகைகளை போலீசார் சரி பார்த்து வருகிறார்கள். மேலும், நீதிமன்றத்தில் ஒப்படைக்க திருடப்பட்ட நகைகளின் ஆவணங்கள் குறித்தும் ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்து உள்ளனர்.

First published:

Tags: Actor Dhanush, Aishwarya Rajinikanth, Chennai, Crime News, Rajinikanth, Theft