முகப்பு /செய்தி /சென்னை / நரிக்குறவர் மக்களை தியேட்டருக்குள் அனுமதிக்க மறுப்பா? ரோகிணி தியேட்டர் விளக்கம்

நரிக்குறவர் மக்களை தியேட்டருக்குள் அனுமதிக்க மறுப்பா? ரோகிணி தியேட்டர் விளக்கம்

மாதிரி படம்

மாதிரி படம்

Rohini Theatre Issue | நரிக்குறவர் மக்களை தியேட்டருக்குள் அனுமதிக்காத விவகாரத்தில் ரோகிணி நிர்வாகம் விளக்கமும் அளித்துள்ளது

  • Last Updated :
  • Chennai, India

சென்னை ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர் மக்களை  படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் பத்து தல திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கன்னடத்தில் வெற்றியடைந்த முஃப்டி என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல. அதில் அவருடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கும் அந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள பத்து தல படம் பார்ப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு நரிக்குறவர் மக்கள் வந்துள்ளனர். தியேட்டருக்கு வெளியே அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரோகிணி திரையரங்கு உரிமையாளர் பன்னீர்செல்வம், பத்து தல படம் யு\ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் அவர்கள் குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.

First published:

Tags: Chennai