முகப்பு /செய்தி /சென்னை / தொழில் போட்டி : ஆட்டோவில் இளைஞர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது..!

தொழில் போட்டி : ஆட்டோவில் இளைஞர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது..!

கைதான மணிகண்டன் மற்றும் சிவா

கைதான மணிகண்டன் மற்றும் சிவா

ஆட்டோவில் இளைஞர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைதான இருவரும் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் என்கிற பல்லு மோகன் (33),கல்யாண பந்தல் சமையல் ஆர்டர் எடுத்து வேலை செய்பவர். கோயில் திருவிழாக்காக பந்தல் போடுவதற்காக புதுவண்ணாரப்பேட்டை பகுதியில்  அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் தெருவில் உள்ள முருகன் கோயிலுக்கு கடந்த இரண்டு நாட்களாக பந்தல் போட்டு வருகின்றார்.

இந்நிலையில் நேற்று இரவு மோகன் மற்றும் அவரது தம்பியான தீபன் வேலைகளை முடித்துவிட்ட நிலையில்  தீபன் வீட்டிற்கு சென்றுள்ளார்.போதையில் இருந்த மோகன் நான் இங்கே தங்கி விட்டு வருகிறேன் என்று தனது தம்பியிடம் கூறியுள்ளார்.அதே தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோவில் மோகன் சென்று உறங்கியுள்ளார்.

இன்று அதிகாலை ஆட்டோ எடுப்பதற்காக உரிமையாளர் விஜய் வந்து பார்த்தபோது ஆட்டோவில் உள்ளே மோகன் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக இருந்துள்ளார் இதைபார்த்த ஆட்டோ உரிமையாளர் அதிர்ச்சியடைந்து   காவல் கட்டு பாட்டு அறைக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த  புது வண்ணாரப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Read More : திருவள்ளூரில் காட்டன் சூதாட்டம் நடத்தி வந்த திமுக நிர்வாகி கைது...

விசாரணையில் அப்பகுதியில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட போது இருவர் தப்பி செல்வது தெரியவரவே விசாரணையை துரிதப்படுத்தி தண்டையார் பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஐஓசி பகுதியை சேர்ந்த சிவா ஆகிய இருவரும் என்பதும் தெரிய வந்தது

இருவரையும்  கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் மணிகண்டனுக்கும் இறந்த மோகன் என்பவருக்கும் தொழில் போட்டி இருந்து வந்துள்ளதும், மணிகண்டனை காட்டிலும்  டிஜே போடுவது பந்தல் போடுவது போன்ற ஆர்டர்கள் அதிக அளவில் பல்லு மோகனுக்கு கிடைப்பதாலும் முன்விரோதம் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் இரவு வேலை முடித்து விட்டு சம்பவ இடத்திலேயே பல்லு மோகன்  உறங்கிய போது தனது கூட்டாளி சிவாவுடன் அங்கு வந்த மணிகண்டன்  சமாதானம் செய்வது போல் பல்லு மோகனை எழுப்பி மது கொடுத்து விட்டு முன்னரே தாங்கள் தயாராக மறைத்து வைத்திருந்த துறுபிடித்த கத்தியை எடுத்து சிவா கைபிடிக்க மணிகண்டன் கொடூரமாக அறுத்து கொலை செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளனர்

top videos

    கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். தொழில் போட்டி காரணமாக துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொலை செய்து இருவர் கைது செய்யப்பட்டு ள்ள சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    First published:

    Tags: Chennai, Crime News, Murder case