முகப்பு /செய்தி /சென்னை / ஐடி ரெய்டுலாம் வழக்கமா நடக்குறதுதான்.. திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஐடி ரெய்டுலாம் வழக்கமா நடக்குறதுதான்.. திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி

உதயநிதி

வருமான வரித்துறையைக் கொண்டு தி.மு.கவை அச்சுறுத்த முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் இந்த நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், இந்நிறுவனத்துடன் திமுக தலைமை முக்கியப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்தநிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், ‘வருமான வரித்துறை சோதனை நடத்துவதன் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது. திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தகர்த்தெறிந்துவிட்டு பணியாற்றி வருகிறோம்.

ஐ.டி.ரெய்டுகளுக்கெல்லாம் அஞ்சமுடியாது. திமுகவை யாரும் வாழ்த்துவது இல்லை, குற்றச்சாட்டு மட்டுமே கூறி வருவதாகவும் உதயநிதி குறிப்பிட்டார்.

First published:

Tags: Facebook Videos, Udhayanidhi Stalin