முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் மின் கம்பிகளை புதைவிட கம்பிகளாக அமைக்கும் பணிகள் தீவிரம்: அமைச்சர் தகவல்

சென்னையில் மின் கம்பிகளை புதைவிட கம்பிகளாக அமைக்கும் பணிகள் தீவிரம்: அமைச்சர் தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

Minister senthil balaji | முன்னுரிமை அடிப்படையில் மயிலாடுதுறை நகரப் பகுதியில் பணிகள் தொடங்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை மாநகரத்தில் மின் கம்பிகளை புதைவிட கம்பிகளாக அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், மயிலாடுதுறை நகரப் பகுதியில் உள்ள மின் கம்பிகளை பூமிக்கடியில் புதைவிட கம்பிகளாக மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர் ஓடும் வீதியிலும் மின் கம்பிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ராஜகுமார், வேல்முருகன் ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை மாநகரத்தில் மின் கம்பிகளை புதைவிட கம்பிகளாக அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், பெரம்பூர், ஆவடி கோட்டங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதோடு, தாம்பரம், அடையார் கோட்டங்களில் பணிகள் நடைபெற்ற வருவதாகவும் கூறினார்.

மேலும், ஏழு கோட்டங்களில் பணிகளுக்கான மதிப்பீடு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், முன்னுரிமை அடிப்படையில் மயிலாடுதுறை நகரப் பகுதியில் பணிகள் தொடங்கப்படும் எனவும் கூறினார்.

அதேபோல், தேரோடும் வீதிகளில் இருக்கக்கூடிய மின்கம்பிகளை புதைவிட மின்கம்பிகளாக மாற்ற ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளதாக கூறிய அவர், இதன்படி நான்கு கோவில்களில் ஏற்கனவே அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முன்னுரிமை அடிப்படையில் அவசர தேவையின் அடிப்படையில் அனைத்து கோவில்களிலும் பணிகள் செய்துத்தரப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

First published:

Tags: Chennai, Electricity, Lok sabha, Senthil Balaji, TN Assembly