சென்னை தெற்கு மாவட்டம் திமுக சார்பில் மடிப்பாக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, முத்துசாமி, திராவிட இயக்க தமிழ் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் :- தமிழகத்தில் பெண்கள் அதிக ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர், தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னை கோவை மதுரை ஆகிய பகுதிகளில் மேயராக இருப்பவர்கள் பெண்கள், பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று 1920 இல் தந்தை பெரியார் கூறியதை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் 33% வழங்கினார்,
அதைத்தொடர்ந்து தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார் என பெருமிதம் கொண்டார். பெண்களுக்கான ஏராளமான திட்டங்களை மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார். அவர் சொன்னதில் ஒன்று மட்டும் தான் செய்யாமல் இருந்தார் அதுவும் இன்று நிதி நிலை அறிக்கையில் அறிவித்துவிட்டார் என்று பெருமிதம் கொண்டார்.
Read More : "நீட் தேர்வு ரகசியத்தை வெளியிட்ட உதயநிதிக்கு நோபல் பரிசு கொடுங்கள்" - இபிஎஸ் விமர்சனம்!
அதை தொடர்ந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், சட்டமன்ற தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே 85 சதவீதம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஸ்டாலின் என அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம் கொண்டார். மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை அறிவித்த இந்த திட்டத்திற்காக ஏழாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டத்திற்கான வளர்ச்சி திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
சென்னை, கோவை, ஓசூர் ஆகிய மாவட்டங்களில் படித்தவர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பை உருவாக்கும் அளவிற்கு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
கடந்த காலங்களில் செய்படுத்தாமல் விட்டுச்சென்ற திட்டங்களை ஒவ்வொன்றாக பார்த்து அதற்காக நிதி ஒதுக்கி அறிவித்துள்ள முதலமைச்சரை நன்றியோடு நாட்டு மக்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த பாராட்டை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நிதிநிலை அறிக்கை முடிவதற்கு முன்னாரே அரவேக்காட்டுத்தனமாக சில கருத்துக்களை முன்மொழிந்திருக்கிறார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதி நிர்வாகத்தை சரி செய்து மேம்படுத்தி புதிய நிதி ஆதாரங்களை உருவாக்கி இரண்டே ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய வகையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் திட்டங்கள் அமைந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இறுதியில் அப்பகுதி மக்களுக்கு நலத்திட்டங்களை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
செய்தியாளார் : ப.வினோத் கண்ணன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Ma subramanian, Senthil Balaji, Tamil Nadu