சென்னை நொச்சிக்குப்பத்தில் மீன் கடைகளை அகற்றும் பிரச்னை தொடர்பாக, மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னை நொச்சிக்குப்பம் இணைப்புச் சாலையை மீனவர்கள் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி, தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இணைப்புச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள் சாலைகளில் படகுகளை நிறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் காவல் ஆணையர் மற்றும் மீனவர்கள் 14 பேர் பங்கேற்றனர். நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை, நள்ளிரவு வரை நீட்டித்தது.அப்போது, வார இறுதி நாட்களில் மீன்களை விற்பனை செய்யுமாறு மீனவர்களிடம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்கேட்டுக்கொண்டார். பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மீனவப் பிரதிநிதிகள், பொதுமக்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு பதில் தெரிவிப்பதாக கூறிச் சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ma subramanian