முகப்பு /செய்தி /சென்னை / பள்ளிகளின் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்தும் சென்னை மாநகராட்சி - மேயர் பிரியா ஆய்வு..

பள்ளிகளின் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்தும் சென்னை மாநகராட்சி - மேயர் பிரியா ஆய்வு..

பள்ளிகளின் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்தும் சென்னை மாநகராட்சி - மேயர் பிரியா ஆய்வு..

சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பள்ளிகளில் மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

  • Last Updated :
  • Chennai, India

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட பள்ளிகளை மேம்படுத்துவது தொடர்பாக மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார்.

' isDesktop="true" id="993980" youtubeid="Cf0p4ROWO_8" category="chennai">

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 281 பள்ளிகள் இயங்கிவருகின்றன. மேலும் தற்போது புதிதாக 139 பள்ளிகள் சென்னையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

இதனையடுத்து, சோழிங்கநல்லூர் பகுதிக்கு உட்பட்ட பெருங்குடி மற்றும் கொட்டிவாக்கம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மேயர் பிரியா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர், சட்டமன்ற உறுப்பினர், நிலைக்குழு தலைவர், துணை ஆணையர், மண்டல குழுத் தலைவர், அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

First published:

Tags: Chennai, Mayor Priya