முகப்பு /செய்தி /சென்னை / சொத்து வரி கட்ட கடைசி நாள் இதுதான்... தவறினால் அபராதம்.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

சொத்து வரி கட்ட கடைசி நாள் இதுதான்... தவறினால் அபராதம்.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

மாதிரி படம்

மாதிரி படம்

வருகின்ற 31-ம் தேதிக்குள் சொத்து வரி மற்றும் தொழில் வரி செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • Last Updated :
  • Chennai [Madras], India

மாநகராட்சிக்கான நிதி ஆதாரமாக பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. நடப்பு 2022-23 நிதியாண்டு வருகின்ற மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க :  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு கொள்ளையில் மேலும் ஒருவர் அதிரடி கைது!

இதுவரை 1390 கோடி ரூபாய் சொத்து வரியாகவும், 412 கோடி ரூபாய் தொழில் வரியாகவும் வசூலிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 31ம் தேதி கால அவகாசம் முடிவதற்குள் நிலுவையை செலுத்தாவிட்டால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் எனவும், நீண்ட காலமாக வரி செலுத்தாதவர்களின் சொத்துகள் சீல் வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

top videos
    First published:

    Tags: Chennai, Chennai corporation, Property tax