சென்னையில் குடிநீர் வரி செலுத்த மார்ச் 31ஆம் தேதியே கடைசி நாள் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021-22-ம் ஆண்டில் மட்டும் சென்னை மாநகராட்சியில் குடிநீர் வரி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை குறித்து ஆர்.டி.ஐ.யின்கீழ், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம், 29 ஆயிரத்து 765 பேர் குடிநீர் வரி செலுத்தவில்லை என்றும், இது முந்தைய ஆண்டுகளை விட இரண்டு மடங்கு என்றும் தெரிவித்துள்ளது.
2020-21-ம் ஆண்டில் 12 ஆயிரத்து 148 பேர் குடிநீர் வரி செலுத்தாமல் இருந்ததாகவும், 2019-20-ம் ஆண்டில் 10 ஆயிரத்து 639 பேர் குடிநீர் வரி பாக்கி வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் குடிநீர் வரி செலுத்துவதை ஆன்லைன் முறைக்கு மாற்றியதே சிக்கலுக்கு காரணம் என கூறும் பொதுமக்கள், ஆன்லைனில் வரி செலுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் குடிநீர் வரி செலுத்துவதற்கான மென்பொருளில் உடனடியாக உரிய மாற்றத்தை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் குடிநீர், கழிவுநீரகற்று வரி கட்டணத்தை மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர் வரி செலுத்துவதற்கு ஏதுவாக வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும் இயங்கும் என்றும், சனிக்கிழமை, மாத இறுதி ஞாயிறன்று காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Drinking water, Water