முகப்பு /செய்தி /சென்னை / அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை : சென்னையில் பரபரப்பு

அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை : சென்னையில் பரபரப்பு

காட்சிப்படம்

காட்சிப்படம்

அடுக்குமாடிக் குடியிருப்பில் 13 வது மாடியில் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை பள்ளிக்கரணையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் 13வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளிக்கரணை அடுத்த ரேடியல் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 13 மாடி உள்ள இந்த குடியிருப்பில் 9-வது தளத்தில் வசித்து வந்தவர் சம்பத் (வயது36). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுகன்யா (35) , ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று (22.03.2023) அதிகாலை 5 மணியளவில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், இறந்தவர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also Read : கொரோனாவில் இருந்து மீண்டார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.. மருத்துவமனை அறிக்கை..!

திருமணமாகி இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த சம்பத் திடீரென தற்கொலை செய்து கொண்டதிற்கான என்ன காரணம் அல்லது இது கொலையா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் - இசிஆர் ப.வினோத் கண்ணன்

First published:

Tags: Chennai, Suicide