முகப்பு /செய்தி /சென்னை / சென்னை அருகே பஸ் மீது ஆட்டோ மோதல்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி.. திருமண பத்திரிகை கொடுக்கச் சென்றபோது கோர விபத்து..!

சென்னை அருகே பஸ் மீது ஆட்டோ மோதல்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி.. திருமண பத்திரிகை கொடுக்கச் சென்றபோது கோர விபத்து..!

சென்னையிலிருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்தும் கல்பாக்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிகொண்டன.

  • Last Updated :
  • Chennai [Madras] |

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த மணமை கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்தும், கல்பாக்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிகொண்டது. இந்த கோர  சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்த  6 பேரும் உடல் நசுங்கி  பலியாகினர்.

ஆட்டோ ஓட்டுநர் சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பதும்  அவரது மனைவி, தாய் உள்ளிட்ட 6 பேர் ஆட்டோவில் பயணித்ததும் தெரிய வந்துள்ளது. மகன் விஜய்-க்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் அழைப்பிதழ் வைக்க சென்றபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. திருமணம் ஆக இருந்த மாப்பிள்ளை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க; பொறியியல் படிக்க நாளை முதல் விண்ணப்பிக்கலாம்... முழு விவரம் இதோ..!

சம்பவம் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோ நிலை தடுமாறி வலது பக்கவாட்டில் திடீரென திரும்பியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

top videos

    செய்தியாளர்: வினோத் கண்ணன்

    First published:

    Tags: Bus accident, Road accident