முகப்பு /செய்தி /சென்னை / கொரோனா பரவல்... வழக்கறிஞர்கள் காணொலி வாயிலாக ஆஜராக அறிவுறுத்தல்

கொரோனா பரவல்... வழக்கறிஞர்கள் காணொலி வாயிலாக ஆஜராக அறிவுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

வழக்கறிஞர்கள் காணொலி வாயிலாக ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், வழக்கறிஞர்கள் காணொலி வாயிலாக ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கடந்த 10-ம் தேதி முதல் நேரடி விசாரணையுடன் காணொலி வாயிலான விசாரணையிலும் பங்கேற்கலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதே போன்று, நீதிமன்ற வளாகத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவும் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் வழக்குகளை விசாரிக்கத் தொடங்குவதற்கு முன்பாக, பல வழக்கறிஞர்கள் முதல் அமர்வில் குழுமியிருந்தனர்.

Also Read : சென்னையில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்

நீதிமன்ற அறையில் வழக்கறிஞர்கள் அதிகளவில் கூடியிருந்ததைப் பார்த்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நேரடியாக ஆஜராவதைத் தவிர்த்து, காணொலி வாயிலாக வாதிடும்படி அறிவுறுத்தினார். மேலும், நான்கு, ஐந்து நீதிபதிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், நீதிமன்ற வளாகத்தில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

top videos
    First published:

    Tags: Chennai, Madras High court