முகப்பு /செய்தி /சென்னை / 3 நாட்கள் தொடர் விடுமுறை.. சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்...!

3 நாட்கள் தொடர் விடுமுறை.. சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்...!

கோயம்பேடு பேருந்து நிலையம் (மாதிரி படம்)

கோயம்பேடு பேருந்து நிலையம் (மாதிரி படம்)

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு அதிகமான மக்கள் செல்கின்றனர்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

நாளை தமிழ் புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை என அடுத்தடுத்து  மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

இதன் காரணமாக அரசுப் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. தமிழ் புத்தாண்டை  முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

top videos

    வழக்கமாக இயக்கப்படும் 2000 பேருந்துகளுடன் கூடுதலாக 500 பேருந்துகளை  போக்குவரத்து துறை இயக்கியுள்ளதால் நெரிசலின்றி பயணம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதே போல விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வருகைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

    First published:

    Tags: Chennai, Koyambedu