முகப்பு /செய்தி /சென்னை / கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்..? - ஹேப்பி நியூஸ் சொன்ன அமைச்சர்...!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்..? - ஹேப்பி நியூஸ் சொன்ன அமைச்சர்...!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர்

கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் நிலத்தில் 393 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயரில் ஜூன் மாதம் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பெருநகர சென்னை வளர்ச்சி குழுமத்தின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதில் கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் நிலத்தில் 393 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம் ஜூன் மாதத்தில்  ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனும் பெயரில் மக்கள் பயன்ப்பாட்டிற்கு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படும் என அறிவித்தார்.

கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து முனையத்திலிருந்து ஒப்பந்த பேருந்துகள் இயக்குவதற்கு வசதியாக வெளிவட்ட சாலையை ஒட்டி வரதராஜபுரத்தில் ஒப்பந்த பேருந்து நிறுத்துமிடம் 29 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 6 ஏக்கரில் 8 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கபடும் என அறிவித்தார்.

First published: