முகப்பு /செய்தி /சென்னை / சென்னை மின்சார ரயில் சேவை 3 மணி நேரத்திற்கு நிறுத்தம்... மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் நடவடிக்கை..!

சென்னை மின்சார ரயில் சேவை 3 மணி நேரத்திற்கு நிறுத்தம்... மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் நடவடிக்கை..!

அறுந்து கிடக்கும் வயர்கள்

அறுந்து கிடக்கும் வயர்கள்

காஞ்சிபுரத்தில் இருந்து செல்லக்கூடிய மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே மின்சார ஒயர் தண்டவாளத்தின் அருகே அறுந்து விழுந்ததால், காஞ்சிபுரத்தில் இருந்து செல்லக்கூடிய மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மின் ஒயர் அறுந்து விழுந்ததையடுத்து, அந்த பகுதி வழியாக செல்லக்கூடிய இதர மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் செல்லக்கூடிய மின்சார ரயில், பாலூர் ரயில்வே நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரையில் இருந்து செல்லக்கூடிய மின்சார ரயில் திருமால்பூர் ரயில்வே நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Also Read : மார்க் போட காசு.. ரூ.40 கோடி லஞ்சமாம்..? - ஆக்‌ஷனில் இறங்கிய அண்ணா பல்கலைக்கழகம்

அறுந்து விழுந்த மின் ஒயரை சரிசெய்யச் செங்கல்பட்டில் இருந்து பொறியாளர்கள் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்து வழக்கம் போல் மின்சார ரயில் இயக்க சுமார் 3 மணி நேரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Electric Train, Kanchipuram