முகப்பு /செய்தி /சென்னை / சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்!

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்!

நீதிபதி எஸ்.வைத்தியநாதன்

நீதிபதி எஸ்.வைத்தியநாதன்

மே 25ம் தேதி முதல் நீதிபதி வைத்தியநாதன்  தலைமை நீதிபதி பணிகளை மேற்கொள்வார்

  • Last Updated :
  • Chennai, India

சென்னை உயர் நீதிமன்ற  பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜா இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

இதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியான எஸ். வைத்தியநாதனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

மே 25ம் தேதி முதல் நீதிபதி வைத்தியநாதன்  தலைமை நீதிபதி பணிகளை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இடம்பெறும் தமிழ்நாட்டின் செங்கோல் - மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

கடந்த 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயம்புத்தூரில் பிறந்த நீதிபதி வைத்தியநாதன், பள்ளி மற்றும் சட்ட படிப்பை சென்னையில் முடித்தார். 1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞர் தொழிலை தொடங்கிய வைத்தியநாதன், 2013ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

top videos

    மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள கங்கா பூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. அந்த பரிந்துரை மீது மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Chennai High court