முகப்பு /செய்தி /சென்னை / ரஜினி மகள் வீட்டில் நகைகள் கொள்ளை.. 4 ஆண்டுகளாக திருடிய பணிப்பெண் சிக்கினார்..!

ரஜினி மகள் வீட்டில் நகைகள் கொள்ளை.. 4 ஆண்டுகளாக திருடிய பணிப்பெண் சிக்கினார்..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கம் மற்றும் வைர நகைகளைத் திருடிய வழக்கில் வீட்டுப் பணிப்பெண் மற்றும் அவரது கணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Last Updated :
  • Chennai, India

நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி இவரது வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போயின.

இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இந்நிலையில் நடிகர் தனுஷ் வீட்டில் பணியாற்றி வந்த ஈஸ்வரி கடந்த 6 மாதத்திற்கு முன்பு திடீரென வேலையை விட்டு நின்றது தெரியவந்தது.

top videos

    அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் ஈஸ்வரி மற்றும் அவரது கணவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சிறுக சிறுக ஐஸ்வரியாவின் நகைகளை அவர் திருடியதும், அந்த நகைகளை விற்று கணவர் அங்கமுத்துவின் வங்கி கணக்கில் பணத்தை மாற்றி சொத்துகள் வாங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரியை கைது செய்துள்ள போலீசார், நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    First published:

    Tags: Aishwarya Rajinikanth, Crime News