முகப்பு /செய்தி /சென்னை / சென்னை சென்ட்ரலுக்கு வந்த ஜனசதாப்தி ரயில்... இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியதால் பரபரப்பு

சென்னை சென்ட்ரலுக்கு வந்த ஜனசதாப்தி ரயில்... இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியதால் பரபரப்பு

ரயில் விபத்து

ரயில் விபத்து

பேசின் பிரிஜ் பணிமனைக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திரும்பும் போது ரயில் பெட்டியின் இரண்டு சக்கரங்கள் திடீரென கழன்றதால் நேற்று இரவு 12 மணிக்கு ரயில் நிறுத்தப்பட்டது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நேற்று இரவு வந்த ஜனசதாப்தி ரயில் பணிமனைக்கு திரும்பும் போது விபத்துக்குள்ளானது. 

விஜயவாடாவில் இருந்து நேற்று மதியம் 3:20 மணியளவில் புறப்பட்ட ஜனசதாப்தி ரயில் நேற்று இரவு 10:40 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த நிலையில் பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பேசின் பிரிட்ஜ் பணிமனை அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ரயில் பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியதாக தகவல் வெளியானது.

மேலும் படிக்க... தமிழகம் வருகிறார் அமித்ஷா.... நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வியூகம்... இபிஎஸ்ஸுடன் சந்திப்பா?

இதனையடுத்து ரயில்வே ஊழியர்களின் 2 மணிநேர நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ரயில் சக்கரங்கள் சீரமைக்கப்பட்டு சீரான நிலைக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது இந்த ரயில் மீண்டும் சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவிற்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Chennai, Train Accident