முகப்பு /செய்தி /சென்னை / இன்று நான் உயிரோடு நின்று பேசுவதற்கு அவர் தான் காரணம் - சிட்டி பாபுவை நினைவுகூர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்று நான் உயிரோடு நின்று பேசுவதற்கு அவர் தான் காரணம் - சிட்டி பாபுவை நினைவுகூர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை கொளத்தூரில் இருந்து வில்லிவாக்கத்தை இணைக்கும் மேயர் சிட்டிபாபு ரயில்வே மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை கொளத்தூரில் 61.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் முன்னாள் மேயராக இருந்த சிட்டிபாபு பெயர் இந்த மேம்பாலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேம்பாலத்தில் நடந்து சென்று பார்வையிட்டார். பின்னர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க..ஸ்டாலின், ’இரண்டு முறை கொளத்தூர் மக்கள் என்னை சட்டமன்றத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள். இரண்டு முறை எதிர்கட்சி வரிசையில் அமர்ந்த நான் இந்த முறை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன்.

கொளத்தூர் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து கொடுத்துள்ளேன். அதன்படி உங்களின் பல நாள் கோரிக்கையான மேயர் சிட்டி பாபு மேம்பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் பலமடங்கு குறையும்.

இந்த மேம்பாலம் கட்ட 2017 ஆண்டு அனுமதி கிடைத்தது. 2019 ல் அடிக்கல் நாட்டப்பட்டு, நான் முதல்வராக வந்தபின் பணிகளை வேகப்படுத்தி, இப்போது திறந்து வைத்துள்ளேன். இந்த மேம்பாலத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று என்னிடம் கேட்டபோது,மேயர் சிட்டிபாபு பெயர் வைக்குமாறு கூறினேன்.

இதையும் படிக்க : இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்கள் ஒரே இடத்தில்.. சென்னை தீவுத்திடலில் திருவிழா..!

இன்று நான் உயிரோடு நின்று பேசுவதற்கு முழுக் காரணம் சிட்டிபாபு தான். அதனால் அவர் பெயரில் இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மிசா சிறையில் இருந்த போது என் மீது விழ இருந்த அடியை அவர் வாங்கவில்லை என்றால் நான் இல்லை. அந்த நன்றி உணர்வோடு தான் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

First published:

Tags: Chennai, CM MK Stalin, Tamil News