முகப்பு /செய்தி /சென்னை / பஸ், ரயில், மெட்ரோவுக்கு ஒரே கார்டு.. சிங்காரச் சென்னை அட்டைக்கு பதிவு செய்வது எப்படி?

பஸ், ரயில், மெட்ரோவுக்கு ஒரே கார்டு.. சிங்காரச் சென்னை அட்டைக்கு பதிவு செய்வது எப்படி?

சிங்கார சென்னை  அட்டை

சிங்கார சென்னை அட்டை

சிங்கார சென்னை அட்டையை மும்பை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோக்களிலும் பயன்படுத்த முடியும்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

ஒரே கார்டை ஸ்வைப் செய்து பேருந்து, மெட்ரோ, லோக்கல் ரயிலில் பயணம் செய்யும் சிங்காரச் சென்னை அட்டை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிங்கார சென்னை அட்டையை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் பெற்றுக்கொள்ளலாம் என CUMTA நிறுவனத்தின் உறுப்பினர் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பயணிகள் எளிமையாக பயணம் மேற்கொள்ள சிங்காரச்சென்னை அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் ஆகிய 3 பயணங்களுக்கும் இந்த ஒரே கார்டை பயன்படுத்த முடியும். இந்த திட்டம் தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளது என்பதால் தற்போதைக்கு இந்த அட்டையை வைத்து மெட்ரோவில் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

அடுத்த இரண்டு மாதத்தில் புறநகர் ரயிலில் இதனை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் வேகம் எடுத்துள்ளன. இது தவிர்த்து சென்னை மாநகரப் பேருந்துகளில் கொண்டு வருவதற்கு இன்னும் 10 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்து மாதத்திற்குள் இதற்கு தேவையான கருவிகளை வாங்கிய பிறகு இந்த அட்டையை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தொகையை ரீசார்ஜ் செய்து அட்டையை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். மெட்ரோவோ, லோக்கல் ரயிலோ அல்லது பேருந்தோ அங்கு பொருத்தப்பட்டிருக்கும் மெஷினில் ஸ்வைப் செய்தால் பயணத்துக்கான கட்டணம் எடுத்துக்கொள்ளப்படும். இதன்மூலம் டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் காத்திருக்க தேவையில்லை. கார்டில் உள்ள பணம் காலியானதும் மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

இதுபோக, சிங்கார சென்னை அட்டையை டெபிட் கார்டு ஆகவும் பயன்படுத்த முடியும். எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் இதனை டெபிட் கார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அட்டைக்கு தற்போது மாதாந்திர கட்டணம் எவ்வளவு என்பது நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால், இந்த அட்டையை பயன்படுத்துவதற்கு சிறப்பு சலுகைகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கார சென்னை அட்டையை மும்பை, பெங்களூரு, டெல்லி உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோக்களிலும் பயன்படுத்த முடியும்.

சிங்கார சென்னை கார்டை பதிவு செய்ய : 

1. இந்த சிங்கார சென்னை கார்டை https://transit.sbi/swift-eform/custCardLink?cardLink=cmrl என்ற இணையப் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

2. அந்த பக்கத்தில் முதலில் உங்களுடைய பெயரை பதிவு செய்ய வேண்டும்.

3. பின்னர் உங்களுடைய மொபைல் எண், பிறந்த தேதி, பான் அட்டை எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.

4. பின்னர் உங்களுடைய ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகிய அடையாள அட்டைகளில் ஏதேனினும் ஒன்றை தேர்வு செய்து, அதன் விவரத்தை உள்ளீடு செய்ய வேண்டும்.

5. இவற்றை தேர்வு செய்த பின்னர், ‘Submit’ கொடுத்தால், உங்களுடைய சிங்கார சென்னை அடையாள அட்டையின் விண்ணப்பம் பதிவு செய்யப்படும்.

First published:

Tags: Chennai, Chennai metro, One country one card